படுக்கையைப் பகிர்ந்தால்தான் பிக்பாஸ் வாய்ப்பா? டிவி தொகுப்பாளர் பரபரப்பு புகார்!

பார்வையாளர்களின் விமர்சனம் படுக்கையைப் பகிர்ந்தால்தான் பிக்பாஸ் வாய்ப்பா? டிவி தொகுப்பாளர் பரபரப்பு புகார்! 0.00/5.00


நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். இவரைப் போலவே தெலுங்கில் நடிகர் நாகார்ஜூனா பிக் பாஸை தொகுத்து வழங்குகிறார்.


தெலுங்கில் இது 3வது சீசன் பிக் பாஸ் ஆகும். இந்த சீசனுக்காக போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில்தான் படுக்கைப் புகார் வெளியாகி தெலுங்கு நட்சத்திரங்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, தெலுங்கு பிக் பாஸில் பங்கேற்க தெலுங்கின் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான ஸ்வேதா ரெட்டியை அழைத்திருக்கிறார்கள். அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் எல்லாம் ஓ.கே. ஆன பிறகு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த ஒருவர் ஸ்வேதாவுக்கு போன் செய்து, உங்களை பிக் பாஸில் சேர்த்தால் எனக்கு என்ன கிடைக்கும்? என்று கேட்டிருக்கிறார்.

இதுபற்றி ஸ்வேதா கூறுகையில், அவர் எதை மனதில் வைத்து அப்படி கேட்டார் என்பது எனக்கு புரிந்து விட்டது. படுக்கையைப் பகிர்ந்தால்தான் வாய்ப்பு என்பதுபோல அவர் பேசினார். அதனால் பிக் பாஸ் வாய்ப்பை மறுத்து விட்டேன், என்றார்.