மலேசியாவில் சின்னத்திரை கலைநிகழ்ச்சி!

பார்வையாளர்களின் விமர்சனம் மலேசியாவில் சின்னத்திரை கலைநிகழ்ச்சி! 0.00/5.00

சின்னத்திரை நடிகர் சங்க கட்டட நிதிக்காக மலேசியாவில் பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடத்த திட்டம் போட்ருக்காங்க. இது பத்தி இந்த சங்கத்தோட தலைவர் ரவிவர்மா செய்தியாளர்கள் கிட்ட பேசுனப்போ,சின்னத்திரை நடிகர் சங்கம் 2003ம் ஆண்டு ஸ்டார்ட் பண்ணோம். ஆனா இதுவரை சங்கம் வாடகை கட்டடத்துல தான் இயங்கி வருது. சங்கத்துக்கு சொந்த கட்டடம் கட்டணும்னு நீண்ட நாள் கனவு. அதை இப்போ நிறைவேத்த போறோம்.


சின்னத்திரை நடிகர், நடிகைகள் கலந்துகொள்ளும் பிரமாண்ட கலை நிகழ்ச்சியை மலேசியாவில் நடத்த இருக்கிறோம். வர்ற ஆகஸ்ட் மாசம் 17ந் இந்த நிகழ்ச்சி, மலேசியாவுல ‘ஷாஅலாம் ஷிலாங்கர் மெலாவாட்டி’ அரங்குல நடக்குது. மலேசிய அரசு உதவியோட இந்த நிகழ்ச்சியை நடத்த போறோம்’னு சொல்லிருக்காரு.