நாளைய இயக்குனர் சிறப்பு விருந்தினராக கதிர்…! 

63

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் “நாளைய இயக்குனர்” சீசன் 6 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படைப்பாளிகள் பலர் தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.


தற்போது அரையிறுதிசுற்று நடைபெற இருக்கிறது. இந்த அரையிறுதியில் வெற்றிபெறுபவர்கள் இறுதிக்கட்டத்தை நோக்கி செல்வார்கள்.


இந்த அரையிறுதி போட்டியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் கல்யாண், நடிகர் கதிர், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்  உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதனை ஞாயிறுதோறும் இரவு 8மணிக்கு காணலாம்.