லாஸ்லியாவா இப்படி? இதுவரை வெளிவராத தகவல்கள்!

பார்வையாளர்களின் விமர்சனம் லாஸ்லியாவா இப்படி? இதுவரை வெளிவராத தகவல்கள்! 0.00/5.00


தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதற்கு முக்கிய காரணம் லாஸ்லியா. தனது வெகுளித்தனமான சிரிப்பாலும், இலங்கைத் தமிழாலும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவந்து விட்டார் இவர்.


குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலமாகிவிட்டார். லாஸ்லியா பற்றி தெரிந்து கொள்ள தினமும் பல்லாயிரக்கணக்கானோர் கூகுள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் பாருங்களேன்.


லாஸ்லியா இலங்கை கிளிநொச்சியில் பிறந்தவர். திரிகோணமலையில் படித்தவர். கொழும்புவில் வளர்ந்தவர். 1996ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி பிறந்தார். இவரது முழுப்பெயர் லாஸ்லியா மரியநேசன். பள்ளி மாணவியாக இருந்தபோதே அம்மணிக்கு தமிழ் ஆர்வம் அதிகம். அதனால் படிப்போடு சேர்ந்து தமிழ் மீடியா பக்கம் கவனம் செலுத்தியுள்ளார்.

பேச்சு, நடை, உடை, பாவனையில் குறும்பு அதிகமாக இருந்தாலும் மகா பக்திமான். இரவில் பைபிள் வாசித்த பிறகே படுக்கைக்குச் செல்வாராம். ரஜினியின் தீவிர ரசிகையான லாஸ்லியாவுக்கு அவரது நண்பர்கள் ஏகப்பட்ட பட்டப்பெயர்களைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். அவற்றில் மிக முக்கியமான பெயர் முட்டக்குஞ்சு.


நம்ம தமிழ் ரசிகர்களும் சமூக வலைதளங்கள் மூலம் லாஸ்லியாவுக்கு எக்கச்சக்க செல்லப் பெயர் வச்சிருக்காங்கனு அம்மணி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் தெரிஞ்சுக்குவாங்க!!