கல்யாண வீட்டில் கற்பழிப்பு காட்சி..! அபராதம் விதித்த சன் டிவி..! 

333

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “கல்யாண வீடு” சீரியல் சில  நாட்களாகவே பல பிரச்னைகளில் சிக்கி தவித்து வருகிறது. இதில் நடித்து வரும் ரோஜா என்ற கதாபாத்திரம் தனது தங்கையை  கற்பழிக்குமாறு கூலிப்படையை அணுகியுள்ளார்.


அந்த கூலிப்படையும் ரோஜாவின் தங்கையை கதற கதற கற்பழித்து விடுகிறது. இந்த எபிசோட்கள் கடந்த மே மாதம் 14 மற்றும் 15ஆம் ஒளிபரப்பானது. 


அந்த இரண்டு நாட்களுமே மிகவும் ஆபாசமாகவும் அறுவெறுப்பாகவும் இந்த இரண்டு எபிசோட்கள் இருந்ததாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன.


இதன் அடிப்படையில் சீரியலை ஒளிபரப்பிய சன் டிவிக்கும் சீரியலைத் தயாரித்த திரு பிக்சர்ஸூக்கும் தி  பிராட்கேஸ்டிங் கன்டென்ட் கம்ப்ளய்ன்ட் கவுன்சிலில் இருந்து நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.


மேலும், ஆபாசமான காட்சிகளை ஒளிபரப்பியதற்காக சன் தொலைக்காட்சிக்கு 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது.