பிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளராக மீண்டும் கமல்ஹாசன்…?

69

பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி கடந்த ஜூன் 23ஆம் தேதி ஆரம்பித்து கடந்த  வாரத்துடன் நிறைவு பெற்றது. இதில் பிக்பாஸ்  டைட்டிலை முகென்  வென்றார்.


100 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போது இந்த சீசன் முடிந்துவிட்டது.


விரைவில் “பிக்பாஸ் 4” நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதனை தொகுத்து வழங்குபவர் யார் என்று மக்கள் மத்தியில் நீண்ட நாள் பேசப்பட்டு வருகிறது. இதனிடையில் நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.


தற்போது பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி கடைசி நாளில் கமல்ஹாசன் கடைசியாக “மீண்டும் சந்திப்போம்” என்று கூறிவிட்டு  விடைபெற்றார். அதனால் “பிக்பாஸ் 4” சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.