பிக்பாஸ் முகெனின் அடுத்த திட்டம்..? புதிய தகவல்கள்..!

63

கடந்த ஜூன் 23ஆம் தேதி தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சி தினமும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. வார இறுதியில் போட்டியாளர் ஒருவர் வெளியற்றப்படுவார். 


சில போட்டியாளர்கள் இதிலிருந்து சர்ச்சை முறையில்  வெளியேற்றப்பட்டனர். மேலும் வைல்ட் கார்ட் முலம்  வெளியேறிய சில பிரபலங்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர்.


சமீபத்தில் கவின் வெளியேற்றப்பட்டார். அதனால் கவினின் ரசிகர்கள் லாஸ்லியாவிற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என தெரிந்தது. அதன்படி  லாஸ்லியாவிற்கு ஓட்டுகள் குவிய ஆரம்பித்தன. இதனால் லாஸ்லியா கொடி கட்டி பறந்தார்.


இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் முகென் ஒரு பாடலை படி திடிரென்று  ரசிகர்கள் மனிதில் இடம்பிடித்துவிட்டார். இதனால் முகெனுக்கும் ஓட்டுகள் குவிய ஆரம்பித்துவிட்டன. அதனால் இந்த பிக்பாஸ் டைட்டிலை முகென்  தான் வெல்லுவார் என்று தெரிவித்து வந்தனர். 


இந்நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் முகென், சாண்டி, லாஸ்லியா உள்ளிட்டோர் நுழைந்துள்ளனர். இதில் பிக்பாஸ் டைட்டில் வின்னராக  முகென் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


மேலும் முகெனுக்கு 7 கோடியே 64 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


இதற்கு முன் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட சில போட்டியாளர்கள் தற்போது சில படங்களில் நடித்து வருகின்றனர். முகென் தற்போது பிக்பாஸ் டைட்டிலை வென்றுள்ளார்.


அதனால் அவரது அடுத்த அடுத்த படங்களில் நாயனாக நடிக்க இருக்கலாம். அடுத்தபடியாக முகென் சாதாரணமாகவே ஒரு பாடகர் அதனால் அவருக்கு  ஒரு சில படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கலாம்.


பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற ஆரவ் தற்போது “மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்” என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். அதேபோல் இந்த சீசனில் வெற்றிபெற்ற முகென் ஏதாவது ஒரு படத்தில் நாயகனாக நடிக்க வாய்ப்பு இருக்கிறது.