Primary Menu

Top Menu

சூரரைப் போற்ற வருகிறார் சூர்யா

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் என்.ஜி.கே. அடுத்ததாக சூர்யா கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ நடித்திருக்கிறார் இந்த 2 படங்களின் படப்பிடிப்பும் முடிவடைந்து, விரைவில் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன.


அதைத்தொடர்ந்து சூர்யா, ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா டைரக்‌ஷனில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு, ‘சூரரைப் போற்று’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இது, சூர்யா நடிக்கும் 38-வது படம் ஆகும்.