தமிழ் படங்களால் கேரளாவில் எடுத்த முடிவு…! 

50

தமிழ் திரைப்படங்களுக்கு மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழில் வெளியாகும் சில படங்களை மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்து வெளியிடுவார்கள். 


தமிழ் நேரடி படங்களையும் பார்க்க மற்ற மாநிலங்களில் ரசிகர்கள் தயாராக தான் உள்ளனர். அந்த வகையில் கேரளாவிலும் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அங்கு தமிழ் நடிகர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.


முன்னணி நடிகர்களின் படங்கள் அல்லது வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் தமிழில் வெளியானால், அதே நாளில் கேரளாவிலும் வெளியாகி வந்தது.


சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஏற்பட்டு வந்த குழப்பத்தால், கேரளா ரசிகர்களும் குழம்பியுள்ளனர். என்னவென்றால், தமிழ் படங்கள் சொன்ன தேதியில் படத்தை வெளியிடாமல் இருப்பது.


இதனால் மலையாள படங்களும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. சமீபத்தில் தமிழில் பல படங்களுக்கு ரிலீஸ் தேதி அறிவித்து அதனை சொன்ன தேதியில்  வெளியிடாமல், மலையாள படங்களுக்கு தடங்களாக இருந்து விடும்.


அதாவது, தமிழ் படங்கள் ரிலீஸ் தேதி அறிவித்தவுடன் கேரளாவில் தமிழ் படத்துக்காக சில திரையருங்குகள் ஒதுக்கப்பட்டு விடும். அதனால் மலையாள படங்கள் தங்களது ரிலீஸ் தேதியை  மாற்றிவிடும்.


தற்போது சமீபகாலமாக தமிழ் படங்கள் சொன்ன தேதியில்  வெளியாவதில்லை. அதனால், “தமிழ் படம் தமிழ்நாட்டில் வெளியான ஒரு வாரத்திற்கு பிறகு தான் கேரளாவில் வெளியாகும்” என முடிவெடுத்துள்ளார்களாம்.