Primary Menu

Top Menu

கைவிடப்படுகிறதா ‘இந்தியன் 2’?

கமல் – ஷங்கர் இணைப்பில் தொடங்கப்பட்ட படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்க, படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கினார்கள். ஆனால், சில நாட்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது எப்போது மீண்டும் படப்பிடிப்பு என்பதற்கு எவ்வித பதிலுமே சொல்ல முடியாமல் நிற்கிறது படக்குழு.


மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் கமல். இதனால், மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் கமல். அது அவருடைய கட்சி சார்ந்த விளம்பரமாக இருந்தாலும், அதில் ”நான் உசுறா நினைத்த தொழிலை விட்டுவிட்டு இங்கு வந்தால்…” என்று தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டுள்ளார் கமல்.


இந்த வார்த்தைகளை வைத்துப் பார்த்தால், கமல் இனிமேல் சினிமாவில் நடிப்பதில்லை என்று தெரிகிறது. அப்படியென்றால் ‘இந்தியன் 2’ படத்தைச் சுற்றி வரும் சர்ச்சைகள் அனைத்துமே உண்மையாகவே கருதப்படுகிறது.


கமல்ஹாசனின் அரசியல் பேச்சுக்களைப் பார்க்கும்போது இனிமேல் சினிமாவில் அவர் நடிக்க மாட்டாரோ? என்ற கேள்வியே எழுகிறது. அவரது ரசிகர்களும் இதுபற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் கமல் மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும். எம்.ஜி.ஆர். அரசியலில் வெற்றி பெற்ற பிறகும் ரசிகர்களுக்காக சிலகாலம் நடிப்பில் கவனம் செலுத்தினார். அதேபோல கமலும் சினிமாவை தொடர வேண்டும் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்