இயக்குனராக தோற்றம் எடுத்த ஆர்.ஜே.பாலாஜி

பார்வையாளர்களின் விமர்சனம் இயக்குனராக தோற்றம் எடுத்த ஆர்.ஜே.பாலாஜி 0.00/5.00

பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த ஆர்.ஜே பாலாஜி, ‘எல்.கே.ஜி’ படத்தின் மூலம் நாயகனாக களமிறங்கினர். இந்தப் படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை இயக்குனர் சரவணனுடன் இணைந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வருகின்ற கோடை விடுமுறைக்கு வெளியாகும் இந்தப் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.