முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் ரெபா மோனிகா

27

தீபாவளிக்கு விஜய் நடிப்பில் வெளியாகிய ‘பிகில்’ திரைப்படத்தின் 10 நாள் வசூல் ரூ 200 கோடியை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்த ரெபா மோனிகாவின் நடிப்பு பெரும்பாலான விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. இந்நிலையில் ‘மாரி 2’ பட வில்லன் டொவினோ தாமஸ் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ரெபா மோனிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.