விரைவில் திரைக்கு வரும் ‘சைக்கோ’

40

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியல் பணிகளுக்கு இடையே மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’, கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ‘ஏஞ்சல்’ மற்றும் மகிழ்திருமேனி இயக்கும் ஒரு படம் என 3 படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில்  ‘சைக்கோ’ திரைப்படம் வருகின்ற 27ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நித்யாமேனன் மற்றும் அதிதிராவ் ஹைதி ஆகிய இருவரும் நாயகியாக நடித்துள்ளனர்.