‘நிசப்தம்’ டீசர் நாளை வெளியாகிறது

26

அனுஷ்கா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘நிசப்தம்’. இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். 4 இந்தியர்களுக்கும் அமெரிக்க போலீசுக்கும் இடையே நடக்கும் கிரைம் திகில் படமாக தயாராகி உள்ளது. அமெரிக்காவில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் திரைக்கு வருகிறது. சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், தற்போது இதன் டீசரை நவம்பர் 6ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.