மீண்டும் ரீ எண்டரி கொடுக்கும் நஸ்ரியா!

26

தமிழ், மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நஸ்ரியா. இவருக்கு இயக்குனர் பகத்பாசிலுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமானதால் இவர் நடிப்பதை விட்டு விட்டார். இதனால் இவருடைய ரசிகர்கள் பலர் சோகத்தில் இருந்தனர்.

இந்நிலையில் பகத்பாசில் தயாரிப்பில் வெளிவர உள்ள ‘ட்ரான்ஸ்’ படத்தில் தனது கணவர் பகத்பாசிலுக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்.