திரைத்துறை வாழ்க்கையில் தான் செய்த மிகப்பெரிய தவறு கஜினி படத்தில் நடித்தது- நயன்தாரா

பார்வையாளர்களின் விமர்சனம் திரைத்துறை வாழ்க்கையில் தான் செய்த மிகப்பெரிய தவறு கஜினி படத்தில் நடித்தது- நயன்தாரா 0.00/5.00

கோலிவுட் திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. சமீபகாலமாக இவர் நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் வானொலி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், திரைத்துறை வாழ்க்கையில் தான் செய்த மிகப்பெரிய தவறு கஜினி படத்தில் நடித்தது தான் என்றும். அந்தப் படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் வேறு மாதிரி இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் ‘கஜினி’ படத்திற்கு பிறகு கதைகளை கவனமாக கேட்க துவங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.