என் பெற்றோர் பொய் சொல்கிறார்கள் – விஜயலட்சுமி

23


கன்னட நடிகை விஜயலட்சுமியும், இயக்குநர் ஆஞ்சநேயாவும் கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கர்நாடகா ராய்ச்சூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தன் பெற்றோரால், கணவருக்கும், தனக்கும் ஆபத்து என, விஜயலட்சுமி புகார் அளித்தார். இதையடுத்து, அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் விஜயலட்சுமியின் பெற்றோரோ, ஆஞ்சநேயாவால் தான் என் மகளுக்கு பிரச்சனை என புகார் அளித்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்த விஜயலட்சுமி, என் பெற்றோர் பொய் புகார் அளிக்கின்றனர். காவல்துறையினர் இதை பெரிது படுத்த வேண்டாம் என்றார்.