கேரளாவில் காப்பான் முதல் நாள் வசூல் ரூ.1.2 கோடி!

21

உலகம் முழுவதும் சூர்யா நடித்த காப்பான் படம் வெளியானது. இது சூர்வாவின் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் மற்ற ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே வருகிறது. சில வருடத்திற்கு பிறகு சூர்யாவிற்கு தகுந்த படம் இது தான் என பெரும்பாலான ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கேரளாவில் இந்த படம் குறைந்த எண்ணிக்கையிலான தியேட்டர்களில் ரீலீஸ் ஆனது. ஆனாலும் அங்கு முதல் நாள் வசூல் ரூ.1.2 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவின் என்.ஜி.கே. படம் கேரளாவில் ரூ 46 லட்சம் தான் முதல் நாள் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.