“காப்பான்” படத்துக்கான தடை நீங்கியது…!

15

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள “காப்பான்” படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். சமீபத்தில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை மீண்டும் மேல் முறையிட்டு மனுதாக்கல் செய்தார் ஜான் சார்லஸ்.


இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கு தன்னுடைய கதை எனக் கூறி காப்பான் திரைப்படத்துக்கு எதிராக ஜான் சார்லஸ் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.