மரைடைப்பால் உயிரிழந்த  நகைச்சுவை நடிகர்  கிருஷ்ணமூர்த்தி…!

23

தவசி, நான் கடவுள், நான், எலி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி. தவசி படத்தில் வடிவேலுடன் ஒசாமா பில்லேடன் அட்ரஸ் கேட்கும் கதாபாத்திரத்தில் மிகவும் பிரபலமானவர். மேலும் நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


கேரளாவில் உள்ள குமுளியில் “பேய் மாமா” என்ற படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார். திடிரென்று அங்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது உடல் இன்று சென்னை எடுத்து வரப்படுகிறது.