வசூல் பிரச்சனையால் ரிலீஸ் தேதி மாற்றப்படுமா..?

19


விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் டகால்டி. இப்படம் வருகின்ற ஜனவரி 31ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சந்தானம் நடித்து வெளியிட தாமதமாகி வந்த சர்வர் சுந்தரம் திரைப்படமும் ஜனவரி 31ம் தேதி ரிலீசாகும் என அறிவித்திருந்தனர். ஆனால் இரண்டு படங்களும் ஒரே தேதியில் ரிலீசாகினால் வசூல் பாதிக்கும் என்பதால் இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடக்கிறது. 31ம் தேதி எந்த படம் ரிலீசாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.