‘ஆதித்யவர்மா’ ரிலீஸ் தேதி மாற்றம்

பார்வையாளர்களின் விமர்சனம் ‘ஆதித்யவர்மா’ ரிலீஸ் தேதி மாற்றம் 0.00/5.00

துருவ் விக்ரம் நடித்த ‘வர்மா’ திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்கிய நிலையில் அந்த படத்தை திரையிட தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டது. இதனையடுத்து இயக்குனர் கிரிசய்யா இயக்கத்தில் ’ஆதித்யவர்மா’ என்ற தலைப்பில் அதே படம் மீண்டும் தயாரானது. இதனை தொடர்ந்து இந்தப் படம் வருகின்ற 21ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.