மாஃபியா வெற்றி கூடுதல் மகிழ்ச்சி


கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாஃபியா சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து அருண் விஜய் கூறும்போது, நான் நடிக்க வந்து 25 ஆண்டுகள் ஆகிறது. இந்தாண்டில் வெளியான மாஃபியா படம் வெற்றி பெற்றது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.