ஆகாஷ் – சினேகா ஜோடியின் நிச்சயதார்த்தமும், பின்னர் விரைவில் திருமணம் !

66

‘இதயம்’ படத்தின் மூலம் புகழ்பெற்று தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவர் கடந்த 2010ம் ஆண்டு மரமணமடைந்தார். இவருக்கு அதர்வா, ஆகாஷ் என 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் அதர்வா முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். அதே சமயம் இளைய மகன் ஆகாஷ் இயக்குனராக முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதனிடையே ‘தளபதி 64’ படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவுடன் ஆகாஷுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்களது காதலுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைத்துள்ளது. இதனையடுத்து நடிகர் விஜய் சென்னை திரும்பியதும் அவரது தலைமையில் ஆகாஷ் – சினேகா ஜோடியின் நிச்சயதார்த்தமும், பின்னர் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.