3 ஹீரோயின்களுடன் ஜோடி சேரும் நடிகர் ஆரி

40


சந்திரா மீடியா விஷன்ஸ் எஸ்.எஸ்.திருமுருகன் தயாரிக்கும் படத்தில் ஆரி அருஜுனா ஹீரோவாக நடிக்கிறார். உடன் நடிக்க பிக்பாஸ் புகழ் லாஸ்வியா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இவர்களுடன் ஸ்ருஷ்டி டாங்கே, பிக்பாஸ் புகழ் அபிராமி வெங்கடேசனும் நடிக்கிறார்கள். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. ஆரி தனது பெயரை ஆரி அருஜுனா என்று மாற்றிய பிறகு நடிக்கும் முதல் படம். ஆரி படங்களில் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் பேண்டசி படம். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது.