வாழ்க்கை குழந்தை இல்லாமல் நிறைவு பெறுவதில்லை- காஜல் பசுபதி

பார்வையாளர்களின் விமர்சனம் வாழ்க்கை குழந்தை இல்லாமல் நிறைவு பெறுவதில்லை- காஜல் பசுபதி 0.00/5.00


தமிழ் சினிமாவில் மௌன குரு, கோ படங்களில் தனித்துவமான வேடங்களில் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகை காஜல் பசுபதி, ‘பிக் பாஸ்’ சீசன் 1 நிகழ்ச்சியின் போட்டியாளரும் ஆவார். இந்நிலையில் “சுர்ஜித் விவகாரம் குறித்து குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும்” என்று லாரன்ஸ் பதிவிட்டிருந்தார். இதனை பகிர்ந்த காஜல், “லாரன்ஸ் மாஸ்டர் உங்கள் நம்பர் எங்களிடம் இல்லை. நான் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறேன். வாழ்க்கை குழந்தை இல்லாமல் நிறைவு பெறுவதில்லை. குழந்தையை தத்தெடுக்க உதவ முடியுமா குழந்தைக்கான செலவுகளை ஏற்றுக்கொள்கிறேன். நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.