Primary Menu

Top Menu

சர்கார் படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியீடு

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தில் முதலில் வெளியாகும் சிங்கிள் டிராக் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

கத்தி மற்றும் துப்பாக்கி ஆகிய படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக தளபதி விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துள்ளார்.

 

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

 

வரும் தீபாவளி பண்டிக்கைக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்ட வகையில் நடக்கயிருக்கிறது.

 

இந்த நிலையில், இப்படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சிம்டாங்கரன் என்ற பாடலின் சிங்கிள் டிராக் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகயிருக்கிறது என்று அறிவித்துள்ளது.

 

ஆனால், இது ஓபனிங் பாடலாக இருக்குமோ என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், இது டூயட் பாடலா? இல்லை குத்துப் பாடலா என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது. இதையடுத்து, அது எந்தப் பாடல் என்ற அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

 

நாள்தோறும் சர்கார் படத்தின் அறிவிப்பு ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், நாளைக்கு சிங்கிள் டிராக் வெளியாகும்.

 

தொடர்ந்து சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை வெளியிட்டுக்கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply