Primary Menu

Top Menu

சண்டக்கோழி2 சினிமா விமர்சனம்!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், போடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பல ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் தடைப்பட்டுள்ளது. எப்படியாவது இந்த ஆண்டு திருவிழாவை நடத்தியாக வேண்டும் என்று ஊர்த்தலைவரான ராஜ்கிரன் முடிவு செய்கிறார்.
7 வருட பகையை தீர்த்துக் கொள்ள விரும்பும் வரலட்சுமியின் குடும்பம், ராஜ்கிரன் பாதுகாப்பில் வளரும் ஜானி ஹரியை திருவிழாவில் வைத்து கொலை செய்ய திட்டமிடுகிறது. இந்த நிலையில் 7 வருடமாக ஊரில் இல்லாத நாயகன் விஷால் ஊர் திருவிழாவுக்காக கம்பம் வருகிறார். அங்கு போலீசாக வேண்டும் என்று முயற்சி செய்து வரும் கீர்த்தி சுரேஷுக்கும், விஷாலுக்கும் காதல் வருகிறது.
கடைசியில், திருவிழாவில் நல்ல படியாக நடந்ததா? வரலட்சுமியின் குடும்ப பகை தீர்ந்ததா? விஷால் – கீர்த்தி சுரேஷ் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
விஷால் தனது வழக்கமான அதிரடியுடன் பஞ்ச் வசனங்களை பேசி ரசிகர்களை கவர்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் தனக்கே உரிய ஸ்டைலில் பட்டையை கிளப்புகிறார். காதல் காட்சிகளும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் முற்றிலும் மாறுபட்ட குறும்புத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
வரலட்சுமிக்கு அழுத்தமான கதாபாத்திரம், வில்லியாக வித்தியாசமான தோற்றத்தில் வந்து பாராட்டை பெறுகிறார். படத்தின் ஓட்டத்திற்கு, படத்தின் தூணாக நிற்கிறார் ராஜ்கிரன். அவரது கதாபாத்திரமே படத்திற்கு பெரிய பலம். சூரி, முனிஸ்காந்த், கஞ்சா கருப்பு காமெடிக்கு துணை நிற்கின்றனர். மற்றபடி அர்ஜய், ஹரிஷ் பேரடி, அப்பானி சரத், சண்முக ராஜன், தென்னவன் துரைசாமி, விஸ்வந்த் என மற்ற கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்துக்கு பெரிதும் உதவுகின்றனர்.
சண்டக்கோழி இரண்டாவது பாகத்தையும் பழிவாங்கல் கதையை மையப்படுத்தியே உருவாக்கி இருக்கிறார் லிங்குசாமி. இருப்பினும் முதல் பாகத்தை போலவே இதிலும் குடும்பம், காதல், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்தையும் தனது பாணியில் கலந்து கொடுத்திருக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம். பாடல்களும் கேட்கும் ரகமாகவே உள்ளது. கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாக நகர்கிறது.

96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்!!

சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்...

Leave a Reply