Primary Menu

Top Menu

கடவுள்னா அது தல அஜித் தான் – மெர்சல் பாட்டி புகழாரம் – வைரல்

நடிகர் அஜித்தை கடவுள் என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார் மெர்சல் படத்தில் நடித்த சிட்டுக்குருவி பாட்டி.

 

தமிழ் சினிமாவில் அஜித்துக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் அதை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

 

தற்போது அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்திற்காக ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது

 

இயக்குநர் சிவா இயக்கும் இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் தம்பிராமையா, ரோபோ சங்கர், சிட்டுக்குருவி பாட்டி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

 

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.

 

படத்தை பொங்கலுக்கு திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் சிட்டுக்குருவி பாட்டி பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அஜித்தை கடவுளாக அவர் புகழ்ந்து பேசியுள்ளார்.

 

விஸ்வாசம் படத்திற்கு முன்னதாக, சிட்டுக்குருவி பாட்டி விஜய் நடித்த மெர்சல் படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

https://twitter.com/twitter/statuses/1044969378825916417

Leave a Reply