கமலுக்கு மட்டும் ஏன் விருது வழங்கப்பட வில்லை – பிரபல எழுத்தாளர் கேள்வி

பார்வையாளர்களின் விமர்சனம் கமலுக்கு மட்டும் ஏன் விருது வழங்கப்பட வில்லை – பிரபல எழுத்தாளர் கேள்வி 0.00/5.00

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜுப்ளி’ என்கிற சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் எழுத்தாளர் பிரபாகர் “தமிழக பாரதிய ஜனதாவின் முகமாக ரஜினியை கட்டமைக்க அந்தக் கட்சித் தலைவர்களின் விருப்பமும் அனைவரும் அறிந்ததே. எனவே அவர்களின் விருப்பப்படி விருது வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதில் கண்டிப்பாக நோக்கம் இருக்கிறது. சினிமாவின் நவீன தொழில்நுட்பங்களை தனது படங்களில் கொண்டு வந்து அதன் மூலம் சினிமாவின் வளர்ச்சியை எப்போதும் சிந்தனையில் கொண்டிருப்பவர் கமல். கமலுக்கு மட்டும் ஏன் விருது வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

எழுத்தாளரின் இத்தகைய கேள்வி சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் ஆர்வலர்களிடமும் ரஜினியின் விருது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஆனால் ரஜினிக்கு வழங்கப்படும் விருது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் சேர்த்து விருது வழங்கப்படுவதாக எண்ண வேண்டும் என பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.