மாஸ்டர் படத்தில் விஜயின் புதிய தோற்றம்

பார்வையாளர்களின் விமர்சனம் மாஸ்டர் படத்தில் விஜயின் புதிய தோற்றம் 0.00/5.00


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் மாஸ்டர். இப்படத்திற்காக நடிகர் விஜய் தனது தோற்றத்தை மாற்றி இருக்கிறார். மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.


இப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 9 -ந்தேதி வெளியாகலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து 4, 5 நாட்கள் விடுமுறை வருவதால் இந்த தேதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், மாஸ்டர் படத்திற்காக விஜய் தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். விஜய் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.