காமெடியன் சந்தானத்திற்கு இன்று பிறந்த நாள்

பார்வையாளர்களின் விமர்சனம் காமெடியன் சந்தானத்திற்கு இன்று பிறந்த நாள் 0.00/5.00


சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்றவர்களில் ஒருவர் சந்தானம். இவர் இன்று தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். காமெடியனாக இருந்து பின்னர் ஹீரோவாக சில படங்களில் நடித்துள்ளார். இவர் முதலில் ஹீரோவாக அறிமுகம் ஆன படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்


நடிகர் சிம்பு தான் இவரது காமெடி திறமையை வெளிக்கொண்டு வந்தார். தற்போது மூன்று முதல் நான்கு படங்கள் கைவசம் வைத்துள்ளார். ஆனால் சந்தானம் என்னதான் ஹீரோவாக நடித்தாலும் அவரது படங்களில் வரும் காமெடி தான் அனைவரையும் சிரிக்க வைக்கும். கமெடியன் சந்தானத்திற்கு அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் பிறந்தநாள் வாழ்த்து கூறிவருகின்றனர்.