துறவியின் நிறம் காவி, அது கட்சி கொடி அல்ல – கஸ்தூரி பதிலடி

பார்வையாளர்களின் விமர்சனம் துறவியின் நிறம் காவி, அது கட்சி கொடி அல்ல – கஸ்தூரி பதிலடி 0.00/5.00

பாஜக தனது டுவிட்டர் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து திருநீறு பூசிய படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. திருவள்ளுவருக்கு மதசாயம் பூச முற்படுவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புகள் தெரிவித்தன. திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதாகவும் விமர்சனங்களும் எழுந்தன.

இதுகுறித்து நடிகை கஸ்தூரியம் திருவள்ளுவர் குறித்த சர்ச்சைக்கு டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,

வெள்ளை உடை என்றாலும் ஓ.கே. காவி வஸ்திரம் என்றாலும் ஓ.கே. திருவள்ளுவரை பச்சை தமிழன் எனக் காட்ட பச்சை உடை உடுத்தினாலும் ஓ.கே. தான். எந்த உடையா இருந்தால் என்ன..அல்லது எந்த மதமா இருந்தா என்ன… இதெல்லாம் ஒரு பிரச்சனைன்னு.. திருக்குறள் ஒரு மத நூல் இல்லை. வள்ளுவர் ஒருவேளை இந்துவா கூட இருந்திருக்கலாம். அதில் என்ன தவறு? வள்ளுவருக்கு காவி கூடாது என்பதெல்லாம் உச்சக்கட்ட அரசியல் கூத்து.

துறவி நிறம் காவி. அது கட்சி கொடி அல்ல. இப்போது வள்ளுவர் எந்த மதம் என்று நிர்ணயித்து விட்டால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்து விடுமா..? என கேள்வி எழுப்பியுள்ளார்.

வழக்கம் போல கஸ்தூரியின் இந்த டுவிட்டிற்கும் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்த வகையில் சமூக வலைதளங்களில் கருத்தை பதவிட்டு வருகின்றனர்.