‘நன்றி நெய்வேலி’ என செல்பி புகைப்படத்தை பகிர்ந்த விஜய்

பார்வையாளர்களின் விமர்சனம் ‘நன்றி நெய்வேலி’ என செல்பி புகைப்படத்தை பகிர்ந்த விஜய் 0.00/5.00

நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக பைனான்சியர் அன்புசெழியன், விஜய், மற்றும் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம், ஆகியோருக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்காக அடுத்த 3 நாட்களில் நேரில் ஆஜராக அவர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


இதனிடையே படப்பிடிப்பின்போது ரசிகர்களைச் சந்தித்து கையசைத்து வந்த நடிகர் விஜய் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். பின்னர் அந்த புகைபடத்தை விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நன்றி நெய்வேலி’ என பதிவிட்டுள்ளார். விஜயின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

#ThanksNeyveli #Vijay #selfi #fans