தலைவர் 168 படத்தில் முதன்முறையாக இணைந்த மற்றொரு பிபரலம்

பார்வையாளர்களின் விமர்சனம் தலைவர் 168 படத்தில் முதன்முறையாக இணைந்த மற்றொரு பிபரலம் 0.00/5.00


நம்மவீட்டு பிள்ளை படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் ‘தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த படத்தில் தற்போது நடிகர் சூரி இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினி படத்தில் சூரி முதல்முறையாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கடந்த 90களில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை ஒருவர் நடிக்கவிருப்பதாகவும், ரஜினியின் மகளாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.