கத்துக்கிட்டு வரேன்னு சொன்ன சூர்யா

பார்வையாளர்களின் விமர்சனம் கத்துக்கிட்டு வரேன்னு சொன்ன சூர்யா 0.00/5.00

செல்வராகவன் டைரக்ஷன்ல சூர்யா, நடிப்புல போனவாரம் ரிலீசான படம் “என்.ஜி.கே”. இந்த படத்துல சூர்யா ஜோடியா சாய்பல்லவி, ராகுல் ப்ரீத் சிங்க் நடிச்சுருந்தாங்க. இந்த படம் ரிலீசான பர்ஸ்ட் ஷோவுல இருந்தே படம் பத்தி நெகட்டிவான ரிவியூஸ்தான் வந்துட்டு இருக்கு.


இந்த படத்த இப்போ நிறைய தியேட்டர்ல இருந்து தூக்கிட்டாங்க. அது தெரிஞ்சதுனால என்னவோ சூர்யா ‘என்ஜிகே’ படம் பத்தி ஒரு ட்விட்டர் போஸ்ட் பண்ணிருக்காரு. அதுல, “#NGK படம் படத்தின எல்லா கருத்துகளையும் தலைவணங்கி ஏத்துக்குறேன். வித்தியாசமான கதையம்சத்தையும் நடிகர்களின் வித்தியாசமான நடிப்பையும் கவனிச்சு பாராட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. கத்துக்கறேன் தலைவரே” னு போட்ட்ருக்காரு.


சூர்யாவோட அடுத்த படம் காப்பான். அதுலயாவது கத்துக்கிட்டு வராரன்னு பாப்போம்.