அட நம்ம சூப்பர் சிங்கர் பிரகதியா… இது ? ரசிகர்களை கிறங்கடிக்கும் குளு குளு புகைப்படங்களால் அதிர்ச்சி

பார்வையாளர்களின் விமர்சனம் அட நம்ம சூப்பர் சிங்கர் பிரகதியா… இது ? ரசிகர்களை கிறங்கடிக்கும் குளு குளு புகைப்படங்களால் அதிர்ச்சி 0.00/5.00

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சூப்பர் சிங்கரில் பங்கு பெற்ற பல்வேறு போட்டியாளர்கள் சினிமாவில் அசத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தனது வசீகரமான குரலில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பாடகி பிரகதி. விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பிரபலமாக விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை , சீனியர், ஜூனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் 2012 ஆம் கலந்து கொண்ட பிரகதி இரண்டாம் பரிசு பெற்றார்.

இவர் இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தின் உறவினர் என்பதும் குறிப்படத்தக்கது. சிறுவயது முதலே இசை மீது கொண்ட ஆர்வத்தால் சிறு வயது முதலே சங்கீதத்தை ஆர்வத்தால் வந்தார். பாடகி பிரகதி 2010 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் நடந்த ஒரு ஜூனியர் பாடல் நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் பரிசை வென்றார்.

அதற்கு பின்னரே 2012 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் நடந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசை வென்றார். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் அனிருத், ஜி வி பிரகாஷ் போன்றவர்கள் இசையில் சினிமாவில் பல பாடல்களை பாடியுளளார் பிரகதி.

இறுதியாக யுவன் இசையமைபில் கண்ணே கலைமானே என்ற படத்தில் ‘செவ்வந்தி பூவே’ என்ற பாடலை பாடி இருந்தார். இவரது குரலுக்கு மட்டுமல்லாமல் இவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. சோஷியல் மீடியாவில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்கச் செய்வார்.

சூப்பர் சிங்கரில் குடும்பப் பாங்கான பெண்ணாக இருந்த பிரகதி நிஜ வாழ்க்கையில் சற்று கவர்ச்சியாக இருந்து வருகிறார். சமீபத்தில் ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி அனைவரையும் ஆச்சரியமடையச் செய்துள்ளன. பிரகதியின் கவர்ச்சி போசை கண்டு சூப்பர் சிங்கர் பிரகதி இப்படி போஸ் கொடுத்திருக்கிறார் என்று ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.