தனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் தல அஜித்-சுருதிஹாசன்

பார்வையாளர்களின் விமர்சனம் தனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் தல அஜித்-சுருதிஹாசன் 0.00/5.00

வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற ‘ரிவேரா 2019’ என்ற கலைநிகழ்ச்சியின் நிறைவு விழாவிற்கு வருகை தந்த நடிகை சுருதிஹாசன், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு மிக பொறுமையாக பதில் கூறினார். தனக்கு மிகவும் பிடித்த படம் ‘மகாநதி’ என்றும், சிறந்த நடிகர் ‘கமல்ஹாசன்’ என்றும் கூறினார். மேலும் தான் நடிகர், பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஆகிய பணிகளில்  ஈடுபடுவதைக் காட்டிலும் ‘என்டர்டெயினராக’ இருப்பதையே பெரிதும் விரும்புவதாக அவர் கூறினார்.

‘நீங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய படங்களில் நடிக்கும்போது, எந்த படஉலகம் உங்களுக்கு சிறந்ததாகவும், இலகுவாகவும் இருக்கிறது?’ என்று மாணவர்கள் கேட்டதற்கு, தனக்கு ‘தெலுங்கு, தமிழ், இந்தி என எந்தத் துறையாக இருந்தாலும் எந்த படமாக இருந்தாலும், நடிப்பதை தான் விரும்பிச் செய்வதாகத் தெரிவித்தார். பின்பு நடிகர் அஜித் பற்றி கேட்டதற்கு, ‘தனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் என்றும், நான் சந்தித்ததில் மிகவும் பண்பான நடிகர் அவர்தான்’ என்றும் கூறினார்.