பிரதமர் மோடியிடம் ஏன் இந்த பாரபட்சம் ? ஆதங்கப்படும் பின்னணி பாடகர்

பார்வையாளர்களின் விமர்சனம் பிரதமர் மோடியிடம் ஏன் இந்த பாரபட்சம் ? ஆதங்கப்படும் பின்னணி பாடகர் 0.00/5.00

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் ஆண்டை ஒட்டி பாலிவுட் நட்சத்திரங்களான ஷாரூக்கான், அமீர்கான், ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட திரைநட்சத்திரங்கள் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டு மகாத்மா காந்தியின் கொள்கைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல ஆலோசனை நடத்தினர்.

இந்த நிகழ்வு டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது சமூக வலைத்தளத்தில், “பிரதமர் மோடியின் வீட்டிற்கு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த போது பிரதமரின் பாதுகாப்பு வீரர்கள் தன்னிடம் இருந்த செல்போனை வாங்கிக்கொண்டு அதற்குரிய டோக்கன்களை கொடுத்தார்கள்.

ஆனால் அதே நேரத்தில் சில பாலிவுட் பிரபலங்கள் மட்டும் பிரதமருடன் செல்பி எடுத்தார்கள். அவரகளுக்கு மட்டும் செல்போன் எப்படி அனுமதிக்கப்பட்டது ஏன் இந்த பாரபட்சம்” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.