பிரதமருடன் என்னை மட்டும் ஏன் செல்பி எடுக்க விடல..! எஸ்.பி.பி

பார்வையாளர்களின் விமர்சனம் பிரதமருடன் என்னை மட்டும் ஏன் செல்பி எடுக்க விடல..! எஸ்.பி.பி 0.00/5.00

டெல்லியில் கடந்த 29ம் தேதி பிரதமர் மோடி இல்ல விழாவில் நடந்த விருந்தில் நட்சத்திர கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின்னணி பாடகர் எஸ்.பி.பால சுப்பிரமணியம் அந்த விழா குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

பிரதமர் வீட்டு நுழைவு வாயிலில் இருந்த காவலர்கள் எனது செல்போனை வாங்கிக் கொண்டு அதற்கான டோக்கனை கொடுத்ததாகவும், ஆனால் பாலிவுட் பிரபலங்கள் மட்டும் எப்படி பிரதமர் மோடியுடன் செல்பி எடுக்க முடிந்தது என்று கேள்வி கேட்டு பேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இவரது போஸ்ட்டிற்கு சிலர் பிரதமர் மோடி அப்படித்தான் செய்வார் என்று பதிலளித்தனர். மேலும் சிலரோ பிரதமர் விழாவில் பங்குகொண்டு அவரையே குறை கூறுவதா என்று கேள்வி எழுப்பினார்கள். இந்நிலையில் இது குறித்து எஸ்.பி.பி. பதிலளித்துள்ளார்.

இது ஏன் சர்ச்சையாகியுள்ளது ? எனது செல்போனை மட்டும் பறித்துக் கொண்டார்கள், நான் பிரதமர் மோடி மீது அதிருப்தி அடைந்தேன் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். நான் பிரதமருக்கு எதிராக பேசவும் இல்லை. செலிபிரிட்டிகளுக்கு எதிராகவும் கூறவில்லை.

எங்களுக்கு செல்போன் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பாலிவுட் செலிபிரிட்டி மட்டும் பிரதமருடன் செல்பி எடுத்தார்கள். அது போன்று எங்களால் செய்யமுடியவில்லை. அவ்வளவு தான். நான் ஒரு சாதாரண ஆள். அன்று நடந்ததை தெரிவித்தேன். நான் புகாராக எதுவும் தெரிவிக்கவில்லை. பிரதமர் இல்லத்தில் மற்றவர்களுக்கு அளித்த மரியாதையை எனக்கும் அளித்தார்கள்.

எங்களை செல்போன் எடுத்துச் செல்லாதீர்கள் என்று கூறியவர்கள், எப்படி பாலிவுட் செலிபிரிட்டிகள் மட்டும் பிரதமர் மோடியுடன் செல்பி எடுக்க முடிந்தது என கேள்வி கேட்டேன்.