விமான நிறுவனத்தை விட்டு விளாசிய நடிகை சோனாக்ஷி

பார்வையாளர்களின் விமர்சனம் விமான நிறுவனத்தை விட்டு விளாசிய நடிகை சோனாக்ஷி 0.00/5.00

சோனாக்ஷி சின்ஹா சமீபத்தில் தனியார் விமானத்தில் சென்றிருந்த போது, தன்னுடைய லக்கேஜை சரிவர பாதுகாக்கப் படாததால் விமான நிறுவனத்தை சமூக வலைதளத்தில் திட்டியுள்ளார்.

பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா சில தினங்களுக்கு முன் இண்டிகோ தனியார் விமானத்தில் பயணம் செய்துள்ளார். விமானத்தில் இருந்து கீழே இறங்கி தனது லக்கேஜை எடுக்க சென்ற போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவரது லட்கேஜின் பைப்பிடிகள் உடைந்திருந்தன. அதன் அடிப்பகுதியில் இருந்த சக்கரங்களும் செயல்பட வில்லை.

இதனால் கடுங்கோபமடைந்த சோனாக்ஷி, அவரது சூட்கேஷின் படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, இந்த விமான நிறுவனம் லக்கேஜை கையாளும் லட்சணத்தை பாருங்கள், என்று விமான நிறுவனத்தின் மானத்தை வாங்கிவிட்டார். அதிர்ச்சி அடைந்த விமான நிறுவனம், சோக்ஷியிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.