மீண்டும் மாநாட்டில் இணைந்ததால் ஐயப்பனுக்கு மாலை போடும் சிம்பு!

பார்வையாளர்களின் விமர்சனம் மீண்டும் மாநாட்டில் இணைந்ததால் ஐயப்பனுக்கு மாலை போடும் சிம்பு! 0.00/5.00

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், உருவாகவிருந்த ‘மாநாடு’ திரைப்படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ளார்.

சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சிம்புவுக்குப் பதிலாக வேறொருவர் நடிப்பார் என்று படக்குழு அறிவித்தது. இதனை தொடர்ந்து சிம்பு – சுரேஷ் காமாட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் மீண்டும் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனை முன்னிட்டு ஐயப்பன் கோவிலுக்கு இன்று முதல் சிம்பு மாலை போடவுள்ளார். சிம்புவின் இந்த திடீர் மாற்றம் அவரது ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#simbu #maanadumovie #aiyappansamy