ஷூட்டிங்கில் பிசியான ரேஷ்மா!

பார்வையாளர்களின் விமர்சனம் ஷூட்டிங்கில் பிசியான ரேஷ்மா! 0.00/5.00


பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அதனை கொண்டாடும் விதமாக விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் கொண்டாட்டம் என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

இதில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரும்பாலான பிரபலங்கள் கலந்துக் கொண்ட நிலையில், ரேஷ்மா இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

இதனிடையே, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இயக்குநர் மணிராம் மற்றும் இணை இயக்குநர் அசோக் உடன் ஷூட்டிங்கில் இருக்கிறேன். இந்த டீம் மிகவும் பிடித்திருக்கிறது. இந்த டீமில் இருக்க அனைவரும் என்னுடம் மிகவும் நட்புடன் பழகுகிறார்கள்” என குறிப்பிட்டிருந்தார். மேலும், இதனால் தான் மேற்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றும் கூறியுள்ளார்.