செக்ஸ்க்கு ஒத்துழைக்கததால் பட வாய்ப்பை இழந்த பிரபல நடிகை!

பார்வையாளர்களின் விமர்சனம் செக்ஸ்க்கு ஒத்துழைக்கததால் பட வாய்ப்பை இழந்த பிரபல நடிகை! 0.00/5.00


செக்ஸ்க்கு ஒத்துழைக்காததால் பல படங்களின் வாய்ப்புகளை இழந்திருக்கிறேன் என்று பிரபல நடிகை மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார். அவரது இந்த குற்றச்சாட்டு திரையுலகில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.


சிம்புவின் ஒஸ்தி படத்தில் ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டவர் நடிகை மல்லிகா ஷெராவத். தசாவதாரம் படத்திலும் கமல்ஹாசனுடன் நடித்திருக்கிறார். இந்தி திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் இவர், பல வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.


அடுத்தடுத்து ஏதாவது ஒரு படத்தில் பிஸியாகவே இருக்கும் மல்லிகா ஷெராவத், தற்போது திரையுலகம் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், நான் எந்த ஹீரோவுடனும் நெருங்கிப் பழக மாட்டேன். கொஞ்சம் விலகியே இருப்பேன்.

புரொடியூசர்கள், டைரக்டர்கள்னு பலரும் அவர்களது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். நான் ஒத்துழைக்காததால் படத்தில் இருந்தே என்னை தூக்கியிருக்கிறார்கள். செக்ஸ்க்கு ஓ.கே. சொல்லாததால் பல படங்களின் வாய்ப்புகளை இழந்துள்ளேன், என்று கூறியிருக்கிறார்.


மீ டூ இயக்கம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்திருக்கும் மல்லிகா, மீ டூ ரொம்பவே அவசியமான ஒன்றாகும். அந்த இயக்கத்தை நான் பாராட்டுகிறேன். நிறைய பெண்கள் மீ டூ இயக்கத்தின் மூலம் தங்களது பாலியல் பாதிப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர், என்று குறிப்பிட்டுள்ளார்.