பெற்றோர் சம்மதமின்றி காதலரை கரம்பிடித்த சின்னத்திரை நடிகை

பார்வையாளர்களின் விமர்சனம் பெற்றோர் சம்மதமின்றி காதலரை கரம்பிடித்த சின்னத்திரை நடிகை 0.00/5.00


பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகும் தேன்மொழி சிரியலில் நடித்த நடிகை அஞ்சலிக்கும் அவரது காதலர் பிரபாவிற்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

தனியார் தொலைக்காட்சி டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஞ்சலி. இவர் தற்போது அதே தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் “தேன்மொழி” என்ற சீரியலில் பள்ளி மாணவியாகவும், துருதுருவென சுட்டித்தனம் கொண்ட பெண்ணாகவும் நடித்து வருகிறார்.

தேன்மொழி சீரியலில் பிரபல தொகுப்பாளினி ஜாக்லின் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த சீரியலில் ஜாக்லினுக்கு தங்கையாக நடித்தவர் அஞ்சலி. சமீப காலமாகவே இவர் சீரியல் பக்கமே காணவில்லை. இதனால் அவருக்கு பதில் வேறு ஒருவரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இது குறித்து அஞ்சலி கூறியதாவது, தேன்மொழி சீரியலில் எனது கதாபாத்திரம் லவ் டிராக்கில் செல்ல இருந்தது, ஆனால் அதற்கு என் முகம் செட்டாகவில்லை என்றார்கள் நானும் விலகிவிட்டேன். அதன்பிறகு தான் காதலித்தவரை திருமணம் செய்து கொண்டேன். ஆனால் எனது வீட்டில் காதலுக்கு அனுமதி இல்லை. எனவே பிரபாவின் அம்மா-அப்பா சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம் என கூறியுள்ளார்.