செல்வராகவனின் அடுத்த படம் குறித்த தகவல்

தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். இவர் புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், ஆகிய வித்தியாசமான கதையம்சம் உள்ள் படங்களை இயக்கி உள்ளார். மேலும் சூர்யாவை வைத்து இயக்கிய என்.ஜி.கே. படம் கடந்த வருடம் மே மாதம் திரைக்கு வந்தது. அதன்பிறகு புதிய பட வேலைகளில் ஆர்வம் காட்டாமல் இருந்தார்.

பின்னர் எஸ்.ஜே.சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்த மன்னவன் வந்தானடி, ஆகிய படங்கள் சில வருடங்களுக்கு முன்பே முடிந்தும் இன்னும் திரைக்கு வராமல் உள்ளன. இந்நிலையில் செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில், அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டதாகவும், படத்துக்கான கதையை எழுத தொடங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். செல்வராகவனின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தை எடுக்க இருவரும் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது. அதுபோல் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டமும் செல்வராகவனிடம் இருக்கிறது. எனவே இந்த இரண்டில் எந்த படத்தை அவர் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleNayae Peyae Trailer
Next articleஇளையராஜா ரீமேக் படத்திற்கு இசையமைக்கிறார்