சாய் பல்லவியின் “பிரேமம்” படம் பார்த்து வியந்தேன் – செல்வராகவன்

பார்வையாளர்களின் விமர்சனம் சாய் பல்லவியின் “பிரேமம்” படம் பார்த்து வியந்தேன் – செல்வராகவன் 0.00/5.00

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் என்.ஜி.கே.இப்படத்தில் சாய்பல்லவி,ராகுல் ப்ரீத் சிங்க்,பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதுகுறித்து செல்வராகவன் அளித்த பேட்டி ஒன்றில்:-

“நடுத்தர குடும்பத்து இளைஞன் அரசியலுக்கு வர விரும்புவதும், அதனால் அவன் சந்திக்கும் பிரச்சினைகளும் கதை. நான் சூர்யா ரசிகன் என்பதால் அவரை நடிக்க வைத்தேன். எங்கள் இருவரின் கலவையாக இந்த படம் இருக்கும். எனது வழக்கமான படங்களை விட வித்தியாசமான கதையில் உருவாக்கி உள்ளேன்.

எல்லோரும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கருத்தும் படத்தில் இருக்கும். சாய் பல்லவியும், ரகுல் பிரீத்சிங்கும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். சாய் பல்லவியின் பிரேமம் மலையாள படம் பார்த்து வியந்தேன். படப்பிடிப்பில் நான் கண்டிப்பாக இருப்பதாக பேசுகிறார்கள். மற்ற இயக்குனர்கள் எப்படி இருப்பார்களோ அப்படித்தான் சில கட்டுப்பாடுகள் வைத்து படப்பிடிப்பை நடத்துகிறேன்” என்றார்.