“மேக்கப் போட்டால் வேறு ஒருவர் போல தெரிகிறேன்” – சாய் பல்லவி

பார்வையாளர்களின் விமர்சனம் “மேக்கப் போட்டால் வேறு ஒருவர் போல தெரிகிறேன்” – சாய் பல்லவி 0.00/5.00

சாய் பல்லவி தமிழில் கரு, மாரி 2 என இரண்டு படங்களில் நடித்துள்ளார். சூர்யாவுடன் நடித்துள்ள என்ஜிகே திரைப்படம் மே 31-ந் தேதி திரைக்கு வர உள்ளது.


இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ’நான் ஒருபோதும் அழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன். அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதால் மட்டும் ஒருவருடைய அழகு மாறிவிடாது.


மேக்கப் போட்டால் வேறு ஒருவர் போல தெரிகிறேன் என்று எனக்கு வேண்டியவர்கள் கூறுகிறார்கள். அதன் காரணமாக தான் மேக்கப் போடாமல் நடிக்கிறேன். அதை தான் இயக்குனர்களும் விரும்புகின்றனர்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.