ரஜினி, கமலுக்கு தெலுங்கு நடிகர் சீரஞ்சீவி அறிவுரை!

பார்வையாளர்களின் விமர்சனம் ரஜினி, கமலுக்கு தெலுங்கு நடிகர் சீரஞ்சீவி அறிவுரை! 0.00/5.00

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சீரஞ்சீவி. இவர் நடித்த ‘சைரா நரசிம்மரெட்டி’ திரைப்படம் வருகின்ற 2ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், முன்னணி நடிகராக இருந்தபோது அரசியலில் நுழைந்ததாகவும், ஆனால் தேர்தலில் கோடிக்கணக்கான தொகை செலவு செய்தும், தனது தொகுதியில் தோற்றதாகவும் கூறினார்.


மேலும், “என்னைப் போன்ற சென்சிடிவ் தன்மை கொண்டவர்களால் அரசியலில் இருக்க முடியாது. கமலும், ரஜினியும் என்னைப் போல் இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.


ஆனால் அவர்களிடம் எனது ஒரே வேண்டுகோள் என்னவென்றால், அவர்கள் அரசியலில் இருக்க வேண்டாம். ஏனெனில் அது மதிப்புக்குரியது அல்ல. இருப்பினும் தோல்விகளை மீறி நல்லது செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தால், அரசியலுக்கு வாருங்கள், ஒரு நாள் விஷயங்கள் மாறக்கூடும்” என்று நடிகர் சீரஞ்சீவி கூறினார்.

#rajini #kamal #siranjeevi