ரஜினி, கமலை வைச்சி வதந்தி பரப்பாதீங்க ப்ளீஸ்! – கெஞ்சிக் கேட்கிறார் விஷால்

பார்வையாளர்களின் விமர்சனம் ரஜினி, கமலை வைச்சி வதந்தி பரப்பாதீங்க ப்ளீஸ்! – கெஞ்சிக் கேட்கிறார் விஷால் 0.00/5.00


நடிகர் சங்கத்தேர்தலில் ரஜினியும், கமலும் தங்களது ஆதரவு யாருக்கு என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை வதந்தி பரப்பாதீங்க என்று என்று நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், நடிகர் சங்க தேர்தல் எப்போது நடந்தாலும் எதிரணி இருக்க தான் செய்யும். ஒவ்வொறு அணியும் என்ன செய்திருக்கிறோம் என்பதை மற்ற நடிகர்களிடம் சொல்வது கட்டாயமாக இருக்கும்.


அதைபோன்று நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பதையும் மற்ற நடிகர்களிடம் பகிர்ந்து உள்ளோம். நடிகர் சங்கக்கட்டிடம் கட்டி முடிப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் தடையாக வந்து அமைகிறது. நிச்சயமாக இந்த வருடம் நடிகர் சங்கக் கட்டிட திறப்பு விழா நடைபெறும்.


அனைத்து துறைகள் போலவே சினிமாவிலும் வெற்றி தோல்வி என்பது உள்ளது. இது வியாபாரம் என்பதால் வெற்றி தோல்வி என்பது இருக்கதான் செய்யும். இதில் புதிதாக எந்த மாற்றமும் கிடையாது என்று கூறினார்.


ரஜினி, கமல் ஆதரவு குறித்து கூறுகையில், அதிகாரப்பூர்வமாக் அவர்கள் சொல்லும்வரை வதந்தி பரப்பாதீங்க, என்று வேண்டுகோள் வைத்தார் விஷால்.